Wednesday, February 22, 2012

SOAP 4 Today - நிகழ்காலத்திற்குரியது, நம்பிக்கை அளிக்கிறது, தருகிறது...

Scripture வேதவசனம்: எண்ணாகமம் 11:21 அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
22. ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.
23. அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

Observation கவனித்தல்: ஒரு மாதம் முழுவதும் புசிப்பதற்கு தேவனுடைய வார்த்தையானது போதுமான அளவுக்கு நம்பிக்கை அளிக்க்கக் கூடியது என்பதற்கு மோசே ஏராளமான அற்புதங்களைக் கண்டிருந்தான். ஆனால் ஜனங்களின் குற்றஞ்சாட்டுதல்களினால் மோசே மிகுந்த பாரமுடையவனாகவும் மன அழுத்தமடைந்தவனாகவும் இருந்தான் (வசனங்கள் 11-14 பார்க்க) தேவன் எப்படி செய்ய முடியும் என்று கேள்வி கேட்டான். நிகழ்காலத்திற்குரிய, நம்பிக்கை அளிக்கிற, தருகிற தேவன் மேல் நம்பிக்கை வைக்காமல் குற்றஞ்சாட்டின ஜனங்களின் எண்ணங்களின் மேதே அவன் கவனம் இருந்தது ( தேவன் எப்படி அவர்களுக்குக் கொடுத்தார் என்பதை 31,32 வசனங்கள் கூறுகின்றன) .

Application பயன்பாடு: நிகழ்காலச் சூழ்நிலைகள் கடந்த காலத்தில் தேவன் எனக்கு என்ன செய்தார் என்பதை நான் மறந்து போய் என் விசுவாசத்தில் குன்றும்படிச் செய்கின்றன. ஆனால் நிகழ்காலத்திற்குரிய, நம்பிக்கை அளிக்கிற, தருகிற தேவன் என்னுடனே கூட இருக்கிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம்மை நம்ப முடியும் என்பதினால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

No comments:

Post a Comment