Scripture வேதவசனம் : மாற்கு 2:27 பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
Observation கவனித்தல்: இயேசுவின் சீடர்கள் ஒரு ஓய்வு நாளில் பயிர்கள் வழியாக நடந்து சென்றபோது, அவைகளில் சிலவற்றைப் பறித்துச் சாப்பிட்டனர். இச்செயல் யூதர்கள் ஓய்வுநாளைக் கைக்கொள்வதற்கான பிரமாணத்தை மீறும் செயல் ஆகும். ஓய்வுநாளை ஆசரிக்கும்படி மனிதன் உண்டாக்கப்படவில்லை, மனிதனுக்கு ஆசீர்வாதமாக இருக்குமப்டியே ஓய்வு நாள் உண்டாக்கப்பட்டது என்று இயேசு தெளிவாகக் கூறினார். நியாயப்பிரமாணத்தை மீறாதபடி இருப்பதற்காக யூத மத தலைவர்கள் அனேகச் சட்டங்களை வைத்திருந்தார்கள், அவை மிகுந்த பாரமானவைகளாக இருந்தன.
Application பயன்பாடு: தேவன் சிருஷ்டிப்பை முடித்த பின்பு ஓய்ந்திருந்ததே முதலாவது ஓய்வு நாள் என வேதாகமம் கூறுகிறது. தேவன் களைப்புற்றதினால் ஓய்வு எடுக்காமல், எல்லாவற்றையும் செய்து முடித்தப்டியினால் ஓய்ந்திருந்தார். பத்து கற்பனைகளில் ஒன்றாகக் கூறப்பட்டிருக்கும் ஓய்வு நாள் ஆசரிப்பு என்பது, இயேசுவின் கூற்றின்படி எனது பிரயோஜனத்துக்காகவே கூறப்பட்டிருக்கிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, மனிதனை சிருஸ்டித்த நாளில் இருந்து, எங்கலை அழுத்துகிற காரியங்களை ஒதுக்கி விட்டு ஓய்வு எடுக்க வேண்டியது எங்களுக்கு அவசியம் என்பதை நீர் அறிந்திருந்தீர். ஓய்வுநாள் இளைப்பாறுதலுக்காக நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment