Scripture வேதவசனம்: எண்ணாகமம் 28:1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2. எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.
3. மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
Observation கவனித்தல்: தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்று விரும்புவோர்க்கு இங்கு சில முக்கியமான கருத்துக்கள் காணப்படுகின்றன. முதலாவதாக: தேவனைப் பிரியப்படுத்துவது என்பது அவர் விரும்புவதை விருப்பத்துடனும் மகிழ்வுடனும் செய்வது ஆகும். இரண்டாவதாக: தேவனைப் பிரியப்படுத்துதல் என்பது நம் வாழ்வின் அனுதின அனுபவமாக இருக்க வேண்டும். தேவனைப் பிரியப்படுத்துதல் என்பது மிகவும் கடினமான ஒரு செயல் அல்லது நம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட ஒரு செயல் எனக் கருதக் கூடாது. மூன்றாவதாக: தேவனைப் பிரியப்படுத்துதல் என்பது அன்றாடம் நாம் செய்யக் கூடிய செயல் ஆகும்.
Application பயன்பாடு: நான் ஒரு நண்பனுக்கு பரிசு கொடுக்கும்போது, நான் பெற விரும்புவதைக் கொடுக்காமல் அந்த நண்பர் எதைப் பெற்றுக் கொள்ள விரும்புவாரோ அதையே கொடுக்க முயற்சிப்பேன். நான் எந்தளவுக்கு அவரைப் பற்றி அறிந்திருக்கிறேனோ அந்தளவுக்கு சிறப்பாக எதைக் கொடுக்கவேண்டும் என்பதையும் அறிந்திருப்பேன். தேவனைப் பற்றிய விசயத்திலும் இதுவே; நான் அவரை அதிகம் அறிந்திருந்தால், அவருக்கு அதிக மகிழ்ச்சி அளிப்பது எது எனவும் நன்கு அறிந்திருப்பேன். தேவனுக்குப் பிரியமாக இருப்பது என்பது என் அனுதின வாழ்வின் அனுபவமாக இருக்கிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உமக்கு வேதனையையும் வருத்தத்தையும் தடக் கூடிய காரியங்களைக் காண்பது கடினமானது அல்ல. என் வாழ்க்கை உமக்கு மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் ஆனந்தத்தையும் தருவதாக இருக்க விரும்புகிறேன். ஆமென்.
No comments:
Post a Comment