Thursday, March 1, 2012

SOAP 4 Today - ஒரு குழந்தையை ஏற்றுக் கொள்ளுதல்

Scripture வேதவசனம்: மாற்கு 9:36 ஒரு சிறு பிள்ளையை எடுத்து: அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
37. இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

Observation கவனித்தல்: ஒரு நாட்டின் சார்பாக தூதராக அனுப்பு வைக்கப்படுபவர்கள் அந்த நாட்டின் பிரதிநிதியாக இருக்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் பெயரில் செயல்படுகிறார்கள். அவர்கள் மற்ற நாட்டு தலைவர்களுடன் பேசும்போது தங்கள் நாட்டு தலைவர் வந்து பேசுவது போலவே பேசுகின்றனர்.

குழந்தைகளை “அவரின் பெயரால்” ஏற்றுக் கொள்ளுதல் என்பது நாம் அவர் சார்பாக செய்யும் ஒரு செயலாகவே இருக்கிறது. நாம் அவரின் பிரதிநிதியாக குழந்தையை ஏற்றுக் கொண்டு, அவரை நாம் எப்படி நடத்துவோமோ அதுபோல இவர்களையும் நடத்தவேண்டும்.

Application பயன்பாடு: இயேசு குழந்தைகளிடம் நடந்து கொள்வது போல நானும் நடந்து கொள்ள வேண்டும். பரலோகத்தின் சார்பாக அவர்களை என்னிடமாக நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். குழந்தையை வரவேற்பதில், நான் இயேசுவையும் அவரை அனுப்பியவரையும் என்னிடமாக ஏற்றுக் கொண்டதாகவும் நான் உணர்கிறேன். (குறிப்பு: ஜனங்கள் இந்த வசனங்களை உணர்ந்து கொள்வார்கள் எனில், குழந்தைகளி மத்தியில் ஊழியம் செய்ய ஆட்கள் தட்டுப்பாடு இருக்காது).

Prayer ஜெபம்: கர்த்தாவே, நங்கள் வாழ்க்கையில் நீர் கொண்டு வருகிற குழந்தைகளுக்காக நன்றி. நாங்கள் அவர்களை கவனித்து கற்றுக் கொள்கிறோம். அவர்களை ஆசீர்வதித்து நாங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறோம். உம் நாமத்தில் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, நாங்கள் அதை உமக்குச் செய்ததாகவே நீர் எடுத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி. ஆமென்.

No comments:

Post a Comment