Sunday, February 26, 2012

SOAP 4 Today - பன்றிகள்

Scripture வேதவசனம்: மாற்கு 5:15 இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
16. பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள்.
17. அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

Observation கவனித்தல்: லேகியோன் பிசாசினான் பாதிக்கப்பட்டிருந்த மனிதன் மிகவும் கொடுமையான வேதனைப்பட்டான்(வசனம்2-5), இப்போதூ விடுதலையாக்கப்பட்டான். பிசாசுகள் பன்றிக் கூட்டத்தில் உட்புக அனுமதி கேட்டு, அந்தப் பன்றிகள் மலையிலிருந்து ஏரிக்குள் பாய்ந்து மூழ்கி விட்டன. அந்த மனிதனைப் பற்றி நன்கு அறிந்திருந்த அப்பகுதி மக்கள் தாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா என்பதைப் பார்க்க அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் பன்றிகளுக்குச் சம்பவித்ததைக் குறித்து கேள்விப்பட்ட போது, இயேசுவை அவ்விடம் விட்டுப் போகுமாறு வேண்டிக்கொண்டனர். விடுதலையாக்கப்பட்ட அந்த மனிதனைப் பார்க்கிலும் பன்றிகள் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. இயேசுவின் வருகையைக் காட்டிலும் பன்றிகள் அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

Application பயன்பாடு: இந்தப் பன்றிகளைப் போல நம் வாழ்க்கையிலும் முக்கியமானதாகத் தோன்றும் அனேக காரியங்கள் உண்டு. அவர்கள் என் வருமானத்திற்கு ஆதாரமானவோ, என் பொழுதுபோக்குகளாகவோ, என் விருப்பங்களாகவோ இருக்கலாம். நான் கவனமாக இருக்காவிடில், நான் இயேசுவை முன் வைப்பதற்குப் பதிலாக பன்றிகளை என் முன் வைக்கக் கூடும். நான் என் தியான நேரத்தில் டிவி பார்ப்பதை விட்டு விட்டுச் சென்றால், என் மனதில் இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கவனிக்காமல் செய்தியாளர் என்ன செய்தியைக் கூறியிருப்பார் என்ற சிந்தனை ஓடக்கூடும். டிவியை ஆஃப் செய்வது சில நேரங்களில் பன்றிகளின் மீதான கவனத்திலிருந்து விடுபடுவது ஆகும். !

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் என் வாழ்வில் இருப்பதைக் காட்டிலும் முக்கியமானது எனக்கு வேறெதுவுமில்லை. நான் என் வாயினால் சொல்வது போல என் செயல்கள் மற்றும் விருப்பங்களிலும் காணப்பட பரிசுத்த ஆவியானவரே எனக்கு உதவும். ஆமென்.


No comments:

Post a Comment