Sunday, February 26, 2012

SOAP 4 Today - என் கவனத்தைக் கவருவது என்ன?

Scripture வேதவசனம்: மாற்கு 4:18 வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;
19. இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.

Observation கவனித்தல்: பலவிதமான நிலத்தில் விதைக்கிற விவசாயியைக் குறித்த ஒரு உவமையை இயேசு கூறினார். (தேவனுடைய வார்த்தை எனும் ) விதை பலவிதமான நிலத்தில் (மனித இருதயத்தில்) விதைக்கப்படுகிறது. ஆனால் முடிவுகள் வித்தியாசமாக இருந்தன. இந்த வேதபகுதியில் சொல்லப்பட்டிருக்கிற விதையின் வளர்ச்சி வித்தியாசமானதாக இருந்தது. மிகவும் முக்கியமானதாகவும் விரும்பத்தக்கதாகவும் தோன்றினவைகளால் மிகவும் சிறப்பான வளர்ச்சியைத் தன்னகத்தே கொண்ட விதையின் வளர்ச்சி தடைபட்டது.

Application பயன்பாடு: “இப்பொழுதே இந்த வேலையைச் செய்துவிடு, என்னால் பொறுத்திருக்க முடியாது, நீ பிறகு வேதத்தை வாசித்து ஜெபித்துக் கொள்ளலாம்” என்று சொல்லும் எதாவதொன்று எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். என் கவனத்தை ஈர்க்கத் தூண்டும் எல்லாக் காரியங்களும் என் கவனத்தைப் பெறத் தகுதியானவை அல்ல.

Prayer ஜெபம்: கர்த்தாவே, என் கவனத்தைப் பெறுவதற்காக போட்டிபோடும் குரல்களினால் நான் மதியீனனாகாதபடிக்கு எனக்கு உதவும். ஆமென்.

No comments:

Post a Comment