Monday, April 16, 2012

SOAP 4 Today - தேவனை பிரியப்படுத்துதல்

Scripture வேதவசனம்: மத்தேயு 3: 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
 
Observation கவனித்தல்: ”இங்கே என் மகன் இருக்கிறான், நன் அவனை நேசிக்கிறேன், என் மகன் எனக்குப் பிரியமனவைகளைச் செய்கிறான்” என தேவன் கூறுகிறதை நான் கேட்கிறேன். 

Application பயன்பாடு:  தேவனைப் பிரியப்படுத்தும் ஒருவாழ்க்கையை வாழ, நான் ஒவ்வொரு நாளும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும். ஒரு நாள் என்பது பல மணி நேரங்கள், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் அடங்கியது ஆகும். ஒரு வினாடியிலும் நாம் தேவனை பிரியப்படுத்த இயலும். ஒரு அழகான ஓவியம் வரைய தூரிகையானது பல முறை பயன்படுத்தப்படுகிறது. அது போல நானும் தேவனைப் பிரியப்படுத்தும் நாட்களாக ஒவ்வொரு நாளையும் கருத வேண்டும்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் நாட்கள் உம்மைப் பிரியப்படுத்துமானால், என் வாழ்க்கையும் உமக்குப் பிரியமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் உம் இருதயத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து, உம் முகத்தில் புன்னகை மலர விரும்புகிறேன். ஆமென்

No comments:

Post a Comment