Scripture வேதவசனம்: மத்தேயு 4:4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய
வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று
எழுதியிருக்கிறதே என்றார்.
Observation கவனித்தல்:
மாம்சத்தில் வந்த பிதாவின் பரிபூரண வார்த்தை ஆகிய இயேசு எழுதப்பட்ட தேவ வார்த்தையில் இருந்து பிசாசுக்கு பதில் கொடுத்தார். இயேசுவை முன்மாதிரியாக பார்க்கிற நமக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறதாக இருக்கிறது. நமக்கு கிடைக்கக் கூடியதையே அவர் பயன்படுத்தினார். ஜீவ வார்த்தையாகிய அவர் பிசாசின் சோதனையை மேற்கொள்ள எழுதப்பட்ட வார்த்தையை பயன்படுத்தினார். எழுதப்பட்ட இறைவார்த்தைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது பாருங்கள். நம்மை தாங்கிப் பிடிக்கிற வார்த்தை இதுதான். பிசாசை எதிர்க்க நான் பயன்படுத்தும் வார்த்தை இதுதான்.
Application பயன்பாடு: என் ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கான உணவு எழுதப்பட்ட வார்த்தையில் இருக்கிறது. பிசாசை மேற்கொள்ள எழுதப்பட்ட வார்த்தையை எனக்கு நினைவுபடுத்த நான் பரிசுத்த ஆவியானவரை நம்பலாம். நான் எழுதப்பட்ட வார்த்தையை வாசித்து அதன்படி வாழ்வதின் மூலம் நான் ஆவிக்குரிய பலத்தைப் பெறுகிறேன்.
Prayer ஜெபம்:
என் சரீர ஆரோக்கியத்திற்குத் தேவையானவைகளை தருவதற்காக உமக்கு நன்றி கர்த்தாவே! என் ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கானவைகளையும் தருவதற்காக நன்றி. என் சரீர ஆரோக்கியத்திற்கு நான் நீர் தரும் உணவை உண்ண வேண்டியதாக இருப்பது போல ஆவிக்குரிய உணவையும் உண்ண வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது. உம் வார்த்தைக்கு நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment