Saturday, May 5, 2012

SOAP 4 Today - எல்லாம் அவருக்காக

Scripture வேதவசனம்:    சங்கீதம் 51:1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2. என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
3. என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
 
Observation கவனித்தல்: பத்சேபாளுன் விபச்சார பாவம் செய்து அதை தேவன் சுட்டிக்காட்டியபின் தாவீது ராஜா மேற்கண்ட சங்கீதத்தைப் பாடினார். அவன் தான் ஒரு நல்லவன் என்பதற்காகவோ, அல்லது முக்கியமானவன் என்பதற்காகவோ  அல்லது உண்மை வெளிவந்தால் மற்றவர்களை வேதனைப்படுத்தும் என்பதற்காகவோ இரக்கத்தைக் கெஞ்ச வில்லை. தேவனின் இரக்கத்தைத் தேடுவதற்கான அடிப்படை ஒன்றே ஒன்றுதான்: அது அவருடைய குணாதிசயமே. தேவன் மாறாத கிருபையும் மிகுந்த இரக்கமும் உள்ளவராக இருக்கிறார். 

Application பயன்பாடு:    என் நற்செயல்களின் அடிப்படையில் நான் தேவனின் இரக்கத்தைப் பெற முடியாது. என் பணியின் முக்கியத்துவத்தை வைத்து நான் தேவனின் இரக்கத்தைப் பெற முடியாது. உண்மை என்ன வெனில், நான் என் மன்னிப்பைச் சம்பாதித்துக் கொள்ள முடியாது. என் தகுதியின் அடிப்படையில் அது கொடுக்கப்படுவதில்லை. தேவன் மாத்திரமே என் அறிக்கையைக் கேட்டு என்னை மன்னிக்கிறார். நான் எப்படி இருக்கிறேன் என்பதற்காக அல்லாது அவர் மன்னிக்கிறவராக இருக்கிறபடியினால் மன்னிக்கிறார்.
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் மாறாத அன்பில் இருந்தும், மிகுந்த இரக்கத்திலிருந்தும் எவ்வளவு ஆச்சரியமான கிருபையை நான் பெறுகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment