Scripture வேதவசனம்:
2 சாமுவேல் 14:14 நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே
சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல்,
துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை
நினைக்கிறார்.
Observation கவனித்தல்: 2சாமுவேல் 14:14ல் மிகவும் ஆர்வத்தைத் தூண்டுகிற சம்பவத்தைக் காண்கிறோம். அந்தப் அப்பெண்ணிடம் இருந்து தீர்க்கதரிசனமான வார்த்தைகளைப் பெறுகிறோம். தங்கள் பாவத்தினால் தண்டிக்கப்பட்ட ஜனங்களை தேவன் இன்னமும் நேசிக்கிறார். தம் குமாரனாகிய இயேசுவின் மரணம் மூலமாக அவர்களை தம் சமூகத்திற்குள் கொண்டு வர வழியை உண்டாக்கி இருக்கிறார்.
Application பயன்பாடு: நான் ஒருமுறை என் பாவத்தினிமித்தம் தேவனுடைய பிரசன்னத்தில் இருந்து விலக்கப்பட்டேன். நான் இப்பொழுது மன்னிக்கப்பட்டு அவருடைய ராஜ்ஜியத்தில் ஒரு சேவகனாக, அவர் குடும்பத்தில் ஒரு மகனாக, அவர் சமூகத்தில் ஆராதிக்கிறவனாக இருக்கிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் பாவங்களூக்கான விலைக்கிரயத்தைச் செலுத்தினதற்காக நன்றி. என்னை உம் ராஜ்ஜியத்தில், குடும்பத்தில்
மற்றும் உம் சமூகத்தில் வரவேற்பதற்காக நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment