Tuesday, May 8, 2012

SOAP 4 Today - அவனுடையை பேச்சை வைத்து கண்டுபிடிக்கப்படல்


Scripture வேதவசனம்: மத்தேயு 26:73  சற்று நேரத்திற்குபின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
 
Observation கவனித்தல்:  இயேசு விசாரிக்கப்படும்போது, பேதுருவும் அருகில் இருந்தார். இயேசுவை தெரியாது என பேதுரு இருமுறை மறுதலித்திருந்தார். ஆனால் அவன் பேசியதை வைத்து அவன் யார் என கண்டுபிடித்துவிட்டார்கள். கலிலேயாவில் இருந்து வந்தவர்கள் சில வார்த்தைகளை சொல்லுவதில் தனித்துவம் உள்ளவர்களாக இருந்திருக்கலாம்.  ஆனால் அடுத்த வசனத்தில் பேதுரு தூஷிக்கவும் சபிக்கவும் துவங்கினான் என வாசிக்கிறோம். பேதுருவின் பேச்சுமுறை இயேசுவைச் சேர்ந்தவனாக அவனைக் காண்பித்திருக்கலாம், ஆனால் அவன் சபித்த விதம் அந்த இணைப்பை உடைக்கிறது. 

Application பயன்பாடு:  நான் எவ்விதம் பேசுகிறேன் என்பது மற்றவர்கள் என்னைக் குறித்து எப்படி நினைக்கிறார்கள் என்பதை தீர்மானிக்கிறது. என் வாழ்வில் இயேசுவின் பிரசன்னம் நான் எப்படி செயல்படுகிறேன், எப்படி பேசுகிறேன் என்பதை பாதிக்கிறது. எனக்குள் வாழ்கிற இயேசு என் பேச்சினால் அடையாளம் கண்டுகொள்ளப்படவேண்டும். 

Prayer ஜெபம்: கர்த்தாவே, என் செயல்களிலும், பேச்சிலும் ஜனங்கள் உம்மைக் கண்டுகொள்ளச் செய்யும்.  என் மூலமாக உம் வாழ்க்கையை வாழ உதவும், ஆமென்.

No comments:

Post a Comment