Thursday, May 10, 2012

SOAP 4 Today - அதற்கும் அப்பால்

Scripture வேதவசனம்:    மத்தேயு 28: 18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
 
Observation கவனித்தல்: இயேசு அவர்களை விட்டு சீக்கிரத்தில் சென்றுவிட வேண்டிய  நேரத்தில், நான் உங்களுடனே கூட கடைசி பரியந்தமும்  இருப்பேன் என்று வாக்குபபண்ணுகிறார்.  இவ்வுலகில் அவர் நடமாடியபோது இருந்த, சிலுவையில் மரித்து மற்றும் உயிர்த்தெழுந்த அவருடைய சரீரம் அவர்களை விட்டு சீக்கிரத்தில் பிரிந்துவிடும். ஆனால் இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவர் வர்ந்து, அவர் ஒருபோதும் பிரிந்து செல்லாமல் இருப்பார். 

Application பயன்பாடு: காலங்கள் இன்னும் முடிந்துவிடவில்லை. இயேசு தம் பரிசுத்த ஆவியானவர் மூலமாக இன்றும் இருக்கிறார். இயேசு என்னுடன் வாழ்கிறார்/ அவருடைய வாக்குத்தத்தம் உண்மையானது. இன்றும் அவர் என்னுடனே கூட வாழ்கிறார். எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! வாக்குப் பண்ணினவர் எவ்வளவு அருமயானவர்!
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, உம் வாக்குத்தத்தம் உண்மை. இங்கே நான் இருக்கிறேன், நீரும் என்னுடனே இருக்கிறீர்.   உம்மிடத்தில் இருந்த அதே பரிசுத்த ஆவியானவர் என்னுள் இருக்கிறார் (ரோமர் 8:11). ஆமென்.

No comments:

Post a Comment