Thursday, May 17, 2012

SOAP 4 Today - கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி

Scripture வேதவசனம்:   1நாளாகமம் 29:9 இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.
1 நாளாகமம் 29:14  இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.
 
Observation கவனித்தல்: அவர்கள் ஆலயம் கட்டுவதற்கான பொருட்களைச் சேகரித்தார்கள்.  உதாரத்துவமாகக் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோசப்பட்டார்கள் என 9ம் வசனத்தில் வாசிக்கிறோம்.   14ம் வசனந்த்தில் ஜனங்கள் உற்சாகமாகக் கொடுத்ததைக் குறித்த தாவீதின் மகிழ்ச்சியைக் காண்கிறோம். தங்கள் தலைவர்களின் முன்மாதிரியை ஜனங்கள் பின்பற்றினார்கள். 

Application பயன்பாடு:  நான் உற்சாகமாக உதாரத்துவமாக கொடுப்பவனாக இருக்க விரும்புகிறேன். கொடுப்பதில் நான் அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல முன்மாதிரியை உருவாக்க விரும்புகிறேன். தங்கள் கொடுத்தலில் மகிழ்வதின் மூலமாக என்னைப் பின்பற்றுகிறவர்களை நான் உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.

Prayer ஜெபம்:  கர்த்தாவே, கொடுத்தலில் நீர் முன்வைத்திருக்கும் முன்மாதிரிக்காக நன்றி. எனக்கு முன் வாழ்ந்த தலைமுறையினரிடம் நான் கண்ட முன்மாதிரிகளுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். எனக்குப் பின்வருபவர்களுக்கு என் வாழ்க்கை முன்மாதிரியாக இருக்கச் செய்யும்.  கொடுத்தலில் உள்ள மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கு என்னை அனுமதித்ததற்காக உமக்கு நன்றி. ஆமென்.

No comments:

Post a Comment