Wednesday, May 16, 2012

SOAP 4 Today - மற்றவர்களை ஆசீர்வதித்தல்

Scripture வேதவசனம்:   2 தெசலோனிக்கேயர் 2:16 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும்,
17. உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

Observation கவனித்தல்:  தேவன் தம் பிள்ளைகளை ஆசிவதிக்க விரும்புகிறார். தம் பிள்ளைகளின் மீது தமது ஆசீர்வாதத்தைக் கூற தேவன் தம் ஊழியர்களை அனேகமுறை பயன்படுத்துகிறார். தேவன் ஏற்கனவே அவர்களை நேசித்து, நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுத்திருப்பதன் மூலம் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார் என பவுலைப் பயன்படுத்திக் கூறுகிறார். தொடர்ந்து ஆறுதலும் நம்பிக்கையும் பெருக வேண்டும் என அவர் ஜெபிகிறார்.  

Application பயன்பாடு: முதலாவதாக, நான் களைப்புற்று, அசதியாக இருக்கும்போது, ஏமாற்றமடையும்போது சோர்வுடன் விட்டுவிடாமல் இருப்பதற்கான ஆறுதல் மற்றும் நம்பிக்கை எனும் ஆசீர்வாதத்தை நான் இவ்வசனத்தில் பெறுகிறேன். இரண்டாவதாக, தேவனுடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்குக் கடத்தும் படி நான் உற்சாகப்படுத்தப்படுகிறேன். 

Prayer ஜெபம்:  தேவனே மற்றவர்கள் மூலமாக நீர் என் மேல் கொண்டு வந்திருக்கிற ஆசீர்வாதங்களுக்காக நன்றி. மற்றவர்களை ஆசீர்வதிக்க நீர் பயன்படுத்துபவர்களில் ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment