Thursday, May 24, 2012

SOAP 4 Today - அவர் மரணம் - அவர் ஜீவன்

Scripture வேதவசனம்: ரோமர் 5: 10  நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
 
Observation கவனித்தல்: நாம் தேவனுடன் ஒப்புரவாவதற்கு அவருடைய மரணம் தேவைப்பட்டது,  அவர் தம் ஜீவனின் மூலம் நம்மை பாதுகாக்கிறார். அவருடைய வாழ்க்கை எவ்வளவு அருமையான வாழ்க்கை .   எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவமில்லாமல் வாழ்ந்து, மரணம், பாதாளம் மற்றும் கல்லறை மீது ஜெயம் பெற்று உயிர்த்தெழுந்தார்.   கிறிஸ்துவின் மரணத்தில்,  தேவன் நம் பாவங்களுக்கான பரிகார பலியை செலுத்தி, நாமை நீதிமானாக்கி, நாம் பாவமே செய்யதவர்கள் போல நம்மை பரிசுத்தப்படுத்தி ஆதாமைப் போல ஒரு நிலையை நாம் அடையும்படிச் செய்திருக்கிறார். ஏதேன் தோட்டத்தில் ஆதாமோடு இருப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வருவதில்லை. ஆதாமும் ஏவாளும் செய்தது போலவே நாமும் பாவம் செய்துவிடுவோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் நம்முடன் இருப்பது மாத்திரம் அல்லாது நமக்குள் வசிக்க விரும்புகிறார். இது ஒரு குறிப்பிட்ட நேரம் மாத்திரம் கொள்ளுகிற ஒரு உறவு அல்ல, ஒரு நாளில் 24 மணிநேரமும், வாரம் முழுவதும், வருடமுழுவதும் நாம் கொள்ளுகிற ஒரு உறவு ஆகும். இது மிகவும் சிறப்பானது ஆகும். 

 நம்மை ஒப்புரவாக்குவதில், அவருடைய ஒப்புரவாகுதலின் மரணம் முக்கியத்துவம் பெறுகிறது. நம்மைப் பாதுகாப்பதில், அவர் நமக்குள் வாழ்கிற வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது.
Application பயன்பாடு:  என்னை உருவாக்கின தேவன் என்னை நேசிக்கிறார், எனக்குள் வசிக்கிறார் என்பதை நான் ஒவ்வொரு நாளும் அடிக்கடி எனக்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, எனக்காக ஜீவனைக் கொடுக்குமளவுக்கு, எனக்குள் தங்க விரும்பும் அளவுக்கு  நீர் என்னை நேசிப்பதற்காகவும்,  உமக்கு நன்றி.

No comments:

Post a Comment