Friday, May 25, 2012

SOAP 4 Today - விடுதலையாக்கு, விடுதலையுடனிரு,சுதந்திரமாக வாழு

Scripture வேதவசனம்:  ரோமர் 6:9  மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
10. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
11. அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12. ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
Observation கவனித்தல்: கிறிஸ்துவின் மரணம் வரலாற்றில் இடம் பெற்றது. நான் அது நடந்த நேரத்தையும் இடத்தையும் அறிந்திருக்கிறோம். அது செய்துமுடிக்கப்பட்ட ஒரு வேலை, இனிமேல் ஒருபோதும் சம்பவிக்கப் போவதில்லை. மாறாக, அவர் இன்றும் வாழ்கிறார். அவரின் மரணம் ஒரு வரலாற்று உண்மை. அவர் ஜீவன் நித்தியமானது ஆகும். அவர் இன்றும் உயிர் வாழ்கிறார். 
நான் இயேசுவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்டபோது,  பாவம் என்னை ஆளுகை செய்யாதபடி நான் அதற்கு மரித்தவனாக என்னை எண்ணிக் கொள்ள வேண்டும். இயேசுவின் மரணம் என்னை விடுதலையாக்குகிறது, அவரின் ஜீவன் என்னை விடுதலையுடன் இருக்கச் செய்கிறது.  இவ்வாக்கியத்தை உண்மையாக்குவதற்காக நான் பாவத்துக்கு மரித்தேன் என்று சொல்லாமல், இவ்வாக்கியம் உண்மையாக இருக்கிற படியால் நான் அவ்வாறு சொல்கிறேன். என் மீது பாவத்துக்கு சட்டப்படியான எந்த அதிகாரமும் இல்லை.
Application பயன்பாடு:    வசனம் 12ஐ நான் பயன்படுத்துகிறேன். பாவத்துக்கு நான் சட்டரீதிதாக கட்டுப்படாதவனாக இருக்கிற படியால், நான் அதை எதிர்க்க வேண்டும்.
கிறிஸ்துவின் வெற்றியும் பிரசன்னமும் பாவ சோதனைகள் எனக்கு வருவதைத் தடுப்பதில்லை. இயேசுவின் நாமத்தில் நான் பெற்றிருக்கும் அதிகாரத்தினால் நான் பாவ விருப்பத்துக்கு எதிர்த்து நிற்க முடிகிறது.

prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் ஜெயம் பெற்றவர். உம் பிரசன்னம் என் வாழ்வில் இருக்கும் போது மாத்திரமே நான் பாவத்திற்கு எதிராக நின்று ஜெயிக்க முடியும். ஆமென்.

No comments:

Post a Comment