Scripture வேதவசனம்: எபிரேயர் 3:13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
14. நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
Observation கவனித்தல்: நாம் ஆரம்பத்தில் விசுவாசத்தில் உறுதியாக இருந்தது போலவே முடிக்கும் போதும் இருக்க வேண்டும் என்பதே இந்த அதிகாரத்தின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது என காண்கிறேன். சிறிய பாவங்கள் என்று நாம் கருதுபவைகள் நம் வாழ்வில் நுழைந்து நம்மை ஏமாற்றி, அவை நமக்கு எந்த தீங்கையும் இழைக்காது என்று நம்பச் செய்யவைத்துவிடுகிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தேவனைக் குறித்த காரியங்களில் நாம் நிர்விசாரமாகும்படி செய்துவிடுகிறது. நாம் ஒரு காலத்தில் நினைத்தது போல, உலகக் காரியங்கள் ஆபத்தானவைகள் அல்ல என்றும், தேவனுடைய காரியங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல என்றும் நாம் நினைக்க ஆரம்பித்து விடுகிறோம். ஊக்குவித்து உற்சாகப்படுத்துவது நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்ல உதவுகிறது.
Application பயன்பாடு: மற்றவர்கள் மூலமாக நான் என்வாழ்வில் அனுதினமும் உற்சாகப்படுத்தப்படுவது அவசியமாக இருக்கிறது. என்னைச் சுற்றி இருப்பவர்களை நான் உற்சாகப்படுத்த வேண்டும். ஒரே ஒரு வாழ்க்கை, அதுவும் சீக்கிரத்தில் கடந்து போகும், கிறிஸ்துவுக்காக செய்தவைகள் மாத்திரமே நிலைத்து நிற்கும் என நான் என் பெற்றோரின் சுவரில் எழுதப்பட்ட வாக்கியம் நாம் உண்மை உள்ளவனாக இருக்க என்னை உற்சாகப்படுத்தியது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, மற்றவர்களிடம் இருந்து வரும் ஊக்குவிப்புகளுக்கு திறந்த மனதுள்ளவனாக இருக்க உதவும். நானும் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறவனாக இருக்கச் செய்யும். ஆமென்.
No comments:
Post a Comment