Scripture வேதவசனம்: எபிரேயர் 7:23 அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
24. இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
25. மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
Observation கவனித்தல்: பழைய ஏற்ப்பாட்டு ஆசாரியர்களின் குறை என்னவெனில், அவர்கள் மரித்துவிடுவார்கள். எந்த மதமாக இருந்தாலும் கூட இது உண்மை. பாவத்துக்குப் பரிகாரம் செலுத்த வேண்டி இயேசு செய்த ஊழியம் முழுமையானது. வேறு எந்த பலியில் தேவை இல்லை. ஆயினும் ஒருவிதத்தில் இயேசுவின் ஊழியம் தொடரவேண்டியதாக இருக்கிறது. அவர் மூலமாக தேவனிடம் வருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும் அவருடைய ஊழியம் இன்றும் தொடர்ந்துவருகிறது.
Application பயன்பாடு: என் கடந்த காலப் பாவங்களுக்கு பரிகாரமாகச் செலுத்தப்பட்ட கிரயம் முழுமையானது! என்னால் செலுத்தமுடியாத அந்த கிரயத்தை இயேசு செலுத்தினார். இப்போதும் கூட இயேசு எனக்காக வேண்டுதல் செய்கிறார். அவர் இருக்கிற வரைக்கும் இந்த ஊழியமும் இருக்கும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, என் கடந்த காலப் பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தினதற்காக நன்றி. தொடர்ந்து என்னை நேசித்து, என்னைப் பற்றி நினைத்து, எனக்காக வேண்டுதல் செய்வதற்காக நன்றி. ஆமென்.
No comments:
Post a Comment