Thursday, July 26, 2012

SOAP 4 Today - எழுதி வைத்துச் செல்லுதல்

Scripture வேதவசனம் : 2 பேதுரு 1:13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,
14. இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.
15. மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.

Observation கவனித்தல்: பேதுருவுக்கு இரு நோக்கங்கள் இருந்தது. முதலாவது, தேவன் சொன்ன முக்கியமான சில விஷயங்களை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்பினார். இரண்டாவதாக, தான் மரித்தபின் அவர்கள் நினைவுபடுத்திக் கொள்வார்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ள விரும்பினார். ஆகவே அவர் செய்தது என்ன? அவர் ஒரு கடிதத்தில் அவர்களூக்கு எழுதினார். இப்பொழுது அவர்கள், பேதுரு மரித்த பின்னரும் கூட அவைகளை வாசிக்க முடியும். எல்லோருமே இதே காரணத்திற்காக முக்கியமானவைகளை எழுதி வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

Application பயன்பாடு: என் அனுதின வாழ்வில் நான் அனேக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். என் வார்த்தைகள் உடனடியாக மறக்கப்பட்டுவிடுகின்றன, எனக்கே கூட நான் பயன்படுத்தின வார்த்தைகள் மறந்து விடுகின்றன. சொல்லப்படும் அனைத்து சிந்தனைகளும் நினைவுகூரப்படாமல் மறக்கப்படுவிடுகின்றன. எனினும் சில முக்கியமான விசயங்கள் இருக்கின்றன. அவைகளை நான் கவனமாக ஒழுங்குபடுத்த வேண்டும். இப்பொழுது அவைகள் வாசகர்களுக்கு பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கமுடியும், நான் கடந்து சென்ற பின்பும் அவை ஆசீர்வாதமானவைகளாக இருக்க முடியும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் எழுதும்போது சரியானவைகளை எழுத என்னை வழிநடத்தும். இந்தச் சிந்தனைகளினால் என்னை நீர் ஆசீர்வதிப்பது போல இதை வாசிப்பவர்களையும் ஆசீர்வதியும். ஆமென்.

No comments:

Post a Comment