Sunday, July 15, 2012

SOAP 4 Today - கர்த்தர் சொல்லி இருக்கிறாரே

Scripture வேதவசனம்: எபிரேயர் 13: 5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
6. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.

Observation கவனித்தல்: தேவனுடைய வார்த்தைகளினால் நம் வார்த்தைகளை அமைத்துக் கொள்ள முடியுமானால் அது நல்லது. அவர் சொன்னதை அடிப்படையாக வைத்து நான் சொல்ல வேண்டும். அப்படி நான் பேசும்போது மிகவும் தைரியமாக பேச முடியும்.

Application பயன்பாடு: பேசுவதைக் குறித்த இரண்டு முக்கியமான காரியங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும்: நான் பரிசுத்த ஆவியானவருக்கு எந்தளவுக்கு செவிகொடுக்கிறேனோ, அதைப் பொறுத்து நான் எப்பொழுது பேச வேண்டும் என்பதையும் அறிந்து கொள்கிறேண். நான் தேவனுடைய வார்த்தையை எவ்வளவு அதிகமான அறிந்து கொள்கிறேனோ, அந்த அளவுக்கு நான் எதைப் பேச வேண்டும் என்பதையும் அறிந்து கொள்கிறேன்.

Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நான் வேதாகமத்தை வாசிக்கும்போது, என் இருதயத்தில் சத்தியத்தை பதியப்பண்ணும். நான் என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்களிடம் பேசும்போது, சத்தியத்தை தைரியமாகப் பேச உதவும். ஆமென்.


No comments:

Post a Comment