Scripture வேதவசனம்: யோவான் 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
Observation கவனித்தல்: இது புரிந்து கொள்ள கடினமானதல்ல. மிகவும் எளிமையானது. இயேசுவின் போதனைகளை தங்கள் வாழ்வின் வழியாகக் கொள்கிறவர்கள் மாத்திரமே அவருடைய உண்மையான சீடர்களாக இருக்க முடியும்.
Application பயன்பாடு: நான் இயேசுவின் சீடன் என்று என்னைக் குறித்துச் சொல்கிறவனாக இருந்தால், வேதாகமம் என் வாழ்வில் உயர்ந்த மதிப்பு பெற்றதாக இருகக் வேண்டும். அவருடைய போதனைகளின் படி வாழ, நான் அவைகளை அறிந்திருக்க வேண்டும். அவருடைய போதனைகளை அறிந்து கொள்ள நான் வேதத்தை வாசித்து ஆராய வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, பரணில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் வேதாகமங்கள் அல்ல, என் மனதில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் வேதாகம வார்த்தைகளே என் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கும். நான் உம் உண்மைச் சீடனாக விளங்க எனக்கு உதவும். ஆமென்.
No comments:
Post a Comment