Monday, August 6, 2012

SOAP 4 Today - நாளைய தினத்தைக் குறித்த வாக்குத்தத்தம் அல்ல

Scripture வேதவசனம்: யோவான் 9:4 பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.

Observation கவனித்தல்: இயேசு வாழ்ந்த நாட்களிலேயே அவருடைய பணியைச் செய்து முடிக்க வேண்டிய அவசரமான அவசியம் இருந்தது. உண்மையான விசுவாசிகள் அனைவருக்கும் இந்த அவசரம் உண்டு. நாம் வாழும் நாட்களில் பகற்காலத்தில் செய்து முடிக்க வேண்டிய பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். வருங்கால சந்ததிகள் நம் தலைமுறையை சந்திக்க முடியாமல் போகக் கூடும். நாம்தான் அதைச் செய்ய வேண்டும்.

Application பயன்பாடு: இயேசுவிடம் காணப்பட்ட அந்த அவசரம் என் உறவுகளையும் , நான் எவ்வாறு என் அனுதின வாழ்வை வாழ்கிறேன் என்பதையும் பாதிக்க வேண்டும். நாளைய தினத்திற்கான வாக்குத்தத்தம் அல்ல, என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாளைய தினத்தைக் குறித்த வாக்குதத்தம் இல்லை.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்குத் தரும் ஒவ்வொரு நாளையும் உண்மையுடன் நிறைவேற்ற எனக்கு உதவும். இன்று செய்ய வேண்டியவைகளை நாளைக்குச் செய்து கொள்ளலாம் என்று ஒத்திப் போடாமல், இன்றே செய்ய உதவும். ஆமென்.

No comments:

Post a Comment