Thursday, September 13, 2012

SOAP 4 Today - எளிதில் ஏமாற்றப்படுதல்

Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 18:5 அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.
வெளிப்படுத்தல் 18::8 ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.
வெளிப்படுத்தல் 18:10 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
வெளிப்படுத்தல் 18:6 ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

Observation கவனித்தல்: தேவனின் கோபத்திற்கு இலக்காக இருக்கும் பாபிலோன் நகரத்தைப் பற்றிய அடையாளத்தைக் குறித்து ஜனங்கள் கருத்து வேறுபடுகின்றனர். சிலர் இது அமெரிக்காவைக் குறிக்கிறது என்கின்றனர். ஆனால் பாவத்துக்கு எதிராக தேவன் உடனே செயல்படுவதைக் குறித்து எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. அவர் நீடிய பொறுமை உள்ளவர், ஆனால் ஒரு நாள் வரும், அப்பொழுது ஒரு மணிநேரத்தில் அவர் தம் பரிசுத்தத்தின் நிமித்தம் நியாயந்தீர்க்கப் புறப்படுவார்.

Application பயன்பாடு: சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைத் தருவதாகக் கூறுபவர்கள் நியாயத்தீர்ப்பில் தண்டிக்கப்படுவதைக் குறித்து இயேசு சொன்னார். இன்றைக்கே இரட்சணிய நாள் என்று பவுல் கூறுகிறார். இந்த தரிசனத்துடன் நான் ஒவ்வொரு நாளையும், மணித்துளிகளையும் கழிக்க வேண்டும்.

Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நான் இன்றையத் தினத்தைக் குறித்து கரிசனை இல்லாமல், நியாயத்தீர்ப்பு உடனடியாக் வராது, எல்லாம் அப்படியே தொடரும் என்று சிந்தித்து எளிதில் ஏமாற்றப்படாதபடி இருக்க எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment