Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 19:11.பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
12. அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
13. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
14. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.
15. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
16. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
Observation கவனித்தல்: வேதாகமத்தில் இயேசுவைப் பற்றி அனேக காட்சிகள் உள்ளன. ஆனால் இவ்வசனங்களில் நாம் இறுதி காட்சியைக் காண்கிறோம். முன்பு மாட்டுத்துழுவத்தில் கிடத்தப்பட்டிருந்தவர் இப்பொழுது வெள்ளைக் குதிரையில் இருக்கிறார். மரியாளின் குமாரன் இப்பொழுது தலைமை சேனாதிபதியாக இருக்கிறார். கிருபையுள்ளதாக இருந்த அவருடைய வார்த்தைகள் இப்பொழுது பட்டயத்தைப் போல மிகவும் கூர்மையானதாக இருக்கின்றன. சிறுகுழந்தைகளை ஆசீர்வதித்த மிகவும் கண்ணியமானவர் இப்பொழ்து தேவனுடைய கோபத்தைக் காண்பிக்கிறார். பன்னிரு சீடர்களால் பின்பற்றப்பட்டவரை இப்பொழுது பரலோகச் சேனைகள் பின்பற்றி வருகின்றன. பாடுகள் பட்டு தியாகபலியானவர் இப்பொழுது இராஜாதி இராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவுமாக இருக்கிறார்.
Application பயன்பாடு: இது என் இயேசு. இவரையே நான் நேசிக்கிறேன், அவரும் என்னை நேசிக்கிறார். அவரை என் ஆண்டவராகக் கொண்டிருப்பதில் நான் எவ்வளவு கனப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பதை இந்த உலகத்திற்குக் காண்பிக்கும்படி என் சிந்தனைகள், தீர்மானங்கள், என் வார்த்தைகள் மற்றும் என் செயல்கள் இருக்கும்படி விரும்புகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் பாத்திரர்; நான் உம்மை ஆராதிக்கிறேண். ஆமென்.
Very useful post Jesus Love to You
ReplyDeleteVisit: http://www.valibar.blogspot.com