Scripture வேதவசனம்: வெளிப்படுத்தல் 15:2 அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
3. அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
4. கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
Observation கவனித்தல்: 14ஆம் அதிகாரத்தில் நாம் புதிய பாடலை அவர்கள் பாடினதைப் பற்றிப் பார்த்தோம். இங்கே ஆட்டுக்குட்டியானவரின் பாடலுடன் பாடப்பட்ட மோசேயின் பாட்டாகிய ஒரு பழையப் பாடலைக் குறித்து நாம் வாசிக்கிறோம். பரலோகத்தில் நிச்சயமாகவே இசையில் பலவிதங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இசைவடைவத்தை வைத்து நமக்குப் பிடித்தமானதை நாம் தெரிவு செய்துகொள்வோம் என்பதை நான் நம்புவதில்லை. மாறாக அது தேவனை எவ்விதம் கனப்படுத்துகிறது என்பதை வைத்து தெரிந்து கொள்வோம். அவருக்குப் பிடித்தமானதே நமக்கும் பிடித்தமான இசை ஆகும்.
Application பயன்பாடு: தேவனுடைய இருதயத்துக்கு மகிழ்ச்சியை அளிக்கும் இசை என்ன? இசையில் அவருக்கு மிகவும் பிரியமானது எது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப என் இசை ரசனையை நான் மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் இருதயத்தைப் பார்ப்பதினால், இசையின் வடிவத்தைப் பொறுத்து அவருக்குப் பிரியமான இசை இருக்காது என்று நம்புகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் வாசிக்கும், கேட்கும் இசையில் நீர் மகிழ்ந்து என்னுடன் இன்று மனமகிழ்ச்சியாக இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment