Saturday, September 8, 2012

SOAP 4 Today - தனிப்பட்ட விவரம்

Scripture வேதவசனம் : வெளிப்படுத்தல் 13:16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

Observation கவனித்தல்: இப்படி ஒரு முத்திரையை ஜனங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுவார்கள், உலகமனைத்தும் அம்முத்திரையை புறக்கணித்துவிடும் என்று நான் முன்பு ஒருமுறை நினைத்தேன். ஆனால் தொழில்நுட்பமானது மிகவும் ஆச்சரியமான விதத்தில் வளர்ந்துவிட்டது. பலவருடங்களுக்கு முன்பு தொலைந்து போன ஒரு நாயை என் காரில் ஏற்றிக் கொண்டு உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றேன். அவர்கள் அதன் கழுத்துப் பகுதியில் ஏதேனும் சிப் பொருத்தப்பப்பட்டிருக்கிறதா என்று ஸ்கேன் செய்து பார்த்தனர். அந்த சிப் இல் இருந்து அவர்களால் அந்த நாயின் பெயர், முகவரி மற்றும் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவர்களை பார்க்க முடிந்தது. இப்போது சில கிரெடிட் கார்டுகள் இது போன்ற சிப்களுடன் வருகிறது. வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு முத்திரையை பெறுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும், அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது பைத்தியக்காரத்தனமாகவும் கருதப்படும் என்று இப்போது நம்புகிறேன்.

Application பயன்பாடு: தொழில்நுட்பத்தை அனுபவிப்பதில் நான் மகிழ்ந்தாலும், அது நன்மை மற்றும் தீமைக்கும் பயன்படுத்தப்படக் கூடும் என்ற எச்சரிக்கையுடன் நான் இருக்க வேண்டும். செல்போன் நான் எவருடனும் திடர்புகொள்ளும் சுதந்திரத்தைக் கொடுக்கிறது, ஆனால் நான் அதை பயனப்டுத்தும் போது என் இருப்பிடம் குறித்து தகவல் பதிவுசெய்யப்படுகிறது. என் காரில் உள்ள ஜிபிஎஸ் சிஸ்டம் எனக்கு வழிகாட்டவும், என் கார் தொலைந்துவிட்டால் அதைக் கண்டுபிடிக்கவும் உதவியாக இருக்கிறது. ஆனால் என் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் அது பயன்படுத்தப்படமுடியும்.

Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் பிறப்பதற்கு முன்னமே நீர் என்னைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்திருக்கிறீர். நீர் என்னை நேசிப்பவராகவும் பரிசுத்தராகவும் இருக்கிறீர். நீர் அந்த அறிவை எனக்கு எதிராக அல்லாமல் எனக்கு நன்மை உண்டாகும்படி பயன்படுத்துகிறீர் என்று நான் உம்மை நம்ப முடியும். ஆமென்.

No comments:

Post a Comment