Wednesday, October 10, 2012

SOAP 4 Today - பாவமற்றவர் என 7 முறை அறிவிக்கப்பட்டவர்

Scripture வேதவசனம்: லூக்கா 23:47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
 
Observation கவனித்தல்: இந்த நூற்றுக்கதிபதி யார்? அவன் எதைக் கண்டான்?  அவன் இயேசுவின் சிலுவை மரணத்தை நிறைவேற்றுவதற்க்கு நியமிக்கப்பட்ட வனாக இருந்தான். இயேசு பாவமற்றவர் (அ) குற்றமற்றவர் என பிலாத்து 4 முறை அறிவித்திருந்தான். இயேசு குற்றமற்றவர் என ஏரோது கண்டுகொண்டார் என பிலாத்து கூறினார்.  சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் ஆறாவது தடவையாகவும், இங்கே இந்த வசனத்தில் நூற்றுக்கதிபதி சொன்னது ஏழாவது முறையாகவும் இயேசு குற்றமற்றவர், நீதிமான் என்று அறிவிக்கின்றனர்.    
 
Application பயன்பாடு:    இயேசு குற்றமற்றவர், அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆயினும் பரிசுத்தமுள்ள தேவன் தமது பாவமற்ற மகன் பயங்கரமான ஒரு மரணத்தைப் பெற அனுமதித்தார். ஏன்? ஒரே ஒரு காரணம் தான் உண்டு.  என் பாவங்களினிமித்தம், அவர் எனக்குப் பதிலாக சிலுவையில் மரித்தார்.             
 
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்காக மரித்தீர்.  இப்போது எனக்குள் வாழ்கிறீர். இன்று நான் உமக்காக வாழும்படு சுயத்துக்கு நான் மரிக்கட்டும். நான் உமக்கு அதிக ஆனந்தத்தை அளிப்பவனாக இருக்கச் செய்யும். ஆமென்.

No comments:

Post a Comment