Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 1:11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்?
உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர்
எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே
மறுபடியும் வருவார் என்றார்கள்.
Observation கவனித்தல்: இயேசு அப்பொழுதுதான் அவர்கள் முன்பாக மேலே எழும்பிச் சென்றிருந்தார். தேவ தூதர்கள் இயேசுவின் அறிவுரைகளை அவர்களுகு நினைவுபடுத்தினர். முன்பு இயேசுவுடனே கூட மறுரூப மலையில் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி இருக்க விரும்பினர், இயேசுவோ அங்கே இருந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனச் சொன்னார்.
Application பயன்பாடு: தேவனுடைய பிரசன்னத்தை நான் உணரக் கூடிய சிறப்பான தருணங்கள் இருந்தன. தேவனுடைய சமாதானமும் அன்பும் என்னில் மிகவும் அதிகமாக அச்சமயங்களில் இருந்தன. நான் அங்கேயே இருக்க விரும்புவேன், ஆனால் இயேசுவோ நான் வசிக்கிற இந்த உலகத்திற்குள் போக விரும்பினார். படகு உண்டாக்கப்படுவதன் நோக்கம் நீரில் மிதப்பதே, இந்த சரீரம் உண்டாக்கப்பட்டதின் நோக்கம் இவ்வுலகில் வாழ்வது ஆகும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, உம் சமூகத்தில் நான் மிகவும் களிகூர்ந்த தருணங்களுக்காக உமக்கு நன்றி. அவை நான் உம் சித்தத்தைச் செய்வதற்குக் கடந்து செல்ல என்னை ஆயத்தப்படுத்து, உற்சாகப்படுத்தி பலப்படுத்துகிறது. ஆமென்.
No comments:
Post a Comment