Monday, October 1, 2012

SOAP 4 Today - பார்வையாளர்கள்

Scripture வேதவசனம்: லூக்கா 14:1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
2. அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.

Observation கவனித்தல்: இயேசுவை குறைகூற விரும்பினவர்களால் அவர் மிகவும் கூர்மையாக கவனிக்கப்பட்டார்.  வேறு சிலர் அவரிடமிருந்து எதாவது கிடைக்கும் என்பதற்காக அவரைக் கவனித்தனர். சிலர்  இயேசுவிடம் இருந்து கற்றுக் கொள்வதற்காக அவரைக் கவனித்தனர். சிலர் இயேசு அவர்களுக்கு செய்தவைகளுக்கு நன்றியுணர்ச்சியுடன் அவரைக் கவனித்தனர். மற்றவர்கள்  இயேசுவை நேசித்தபடியால் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். 

Application பயன்பாடு: இன்று நான் பலரின் மத்தியில் இயேசுவை மிகவும் கவனமாக பார்க்கிறேன். ஏனெனில் நான் அவரை நேசிக்கிறேன். இயேசு வாழ்ந்தது போல நாம் வாழ வேண்டும் என்பதற்காக நாம் நற்செய்தி நூல்களை நாம் வாசிக்கிறோம். இயேசு எனக்குள் வாழ்வதால் சிலர் என்னில் இயேசுவைக் காண்கின்றனர் என்பதை நான் அறிவேன். சில வேளைகளில் நான் விரும்புவதைக் காட்டிலும் அதிக கூர்மையாக என்னை அவர்கள் கவனிக்கிறார்கள். ஆகவே நான் அவர்கள் இயேசுவை என்னில் எளிதாகக் காணும்படி வாழ விரும்புகிறேன்.

Prayer ஜெபம்:
  பரிசுத்த ஆவியானவரே,  இயேசுவைக் காணும்படி வாழ்வது மிகவும் எளிது என்பதை உணர உதவும். ஆமென். 

No comments:

Post a Comment