Scripture வேதவசனம்: மாற்கு.4: 38 கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார்.
அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக்
கவலையில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Observation கவனித்தல்: புயலில் சிக்கிக் கொள்ளும் வேளையில், புயலை அமர்த்தும் ஒருவர் படகில் இருப்பது நல்லது. தங்களுடன் படகில் இருப்பவர் காற்று மற்றும் அலைகள் மீது அதிகாரம் கொண்டவர் என்பதை சீடர்கள் திடீரென்று கண்டு கொண்டனர்.
Application பயன்பாடு: இந்த இயேசுவே என் பாவங்களை மன்னித்து எனக்குள் வாழ்கிறார். அவர் என் படகில் மட்டும் அல்ல, என் வாழ்க்கையிலும் இருக்கிறார். காற்றையும் கடலையும் அடக்குபவர் எனக்குள் இருக்கிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்குள் வசிப்பதால் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறேன். இந்த வாழ்க்கையை உம்முடன் பகிர்ந்து கொள்வது என் மகிழ்ச்சி. ஆமென்.
No comments:
Post a Comment