Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 2:
22. இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள்
அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த
செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே
அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

Observation கவனித்தல்: பேதுருவின் பிரசங்கத்தின் கருப்பொருளாக இயேசு இருந்தார். அவருடைய அழிக்க முடியாத வாழ்க்கையை (உயிர்த்தெழுதல்)
விளக்குவதற்கு இயேசுவுக்கு அந்த துன்மார்க்கர் செய்த செயல் (அவரை சிலுவையில் அறைந்தது) அடிப்படையாக ஆனது. “அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.”
Application பயன்பாடு:
கிறிஸ்து எனக்குள் வாழ்வதினாக், மனிதன் எனக்கு செய்வதைக் குறித்து நான் பயப்படத் தேவை இல்லை. மனிதன் எனக்கு செய்யும் மிக மோசமான செயல் எனக்குள் வாழ்கிற அழைக்க முடியாத வாழ்வை உடைய இயேசுவை வெளிப்படுத்தும் மிகப் பெரிய செயலுக்க அடிபப்டையாக மாறிவிடும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, இவைகளை நான் நினைவில் கொள்ள எனக்குதவும். நீர் எனக்குள் வாழ்கிற வாழ்க்கை மரணத்தை விடப் பெரியது என ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆமென்.
Nice
ReplyDelete