Wednesday, October 3, 2012

SOAP 4 Today -எதிர்காலத்திற்காக இன்று ஆயத்தம் பண்ணுதல்

Scripture வேதவசனம்:  லூக்கா 16: 10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
11. அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
12. வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
 
Observation கவனித்தல்:  இங்கே கொஞ்சத்தில் உண்மையுள்ளவராக இருந்து பின் அனேகத்தில் உண்மையுள்ளவராக மாறும் வளர்ச்சியைக் காண்கிறோம். தற்காலிகமானவைகளில் உண்மையுள்ளவராக இருந்து நித்தியமான்வைகளுக்கு உண்மையுள்ளவராக மாறும் வளர்ச்சியையும் காண்கிறோம். மற்றவர்களுக்காக வேலை செய்து பின் தனக்காகவே வேலை செய்யும் ஒரு நிலையையும் நாம் காண்கிறோம்.  

Application பயன்பாடு: நான் என்னிடத்தில் இருப்பவைகளைக் கொண்டு ஆரம்பிக்கவும், அவைகளை பயன்படுத்தவும் விருப்பமுள்ளவனாக இருக்க வேண்டும். இன்றைய என் உண்மையின் அடிப்படையில்தான் என் எதிர்கால வாய்ப்புகள் அமையும் என்பதனை நான் மனதில் கொள்ள வேண்டும்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, என் நிகழ்கால சூழ்நிலைகளினால் நான் சோர்வுறாதபடிக்கும், இன்றைய என் உண்மையே என் எதிர்காலத்திற்கான ஆயத்தம் என்பதை அறிந்து உண்மையாயிருக்க எனக்குதவும். 

No comments:

Post a Comment