Scripture வேதவசனம்: லூக்கா 17: 3 உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க்
குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாப்பட்டால், அவனுக்கு
மன்னிப்பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
Observation கவனித்தல்: பாவம் செய்கிறவரைக் குறித்து இயேசு பேசாமல், பாவம் செய்கிறவருக்கு எதிராக இருப்பவர்களைக் குறித்து இங்கு இயேசு பேசுகிறார். அவர் மனம் திரும்புதலின் முக்கியத்துவத்தைக் குறித்து பேசாமல், மன்னிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார். மன்னிப்பு என்பது வேதனை அல்லது காயத்தை கடந்தகாலத்திற்குள் சென்று குணமாக அனுமதிக்கிறது. மன்னிக்காமல் இருப்பது காயத்தை தொடரச் செய்து, குணமாக்கமுடியாமல் செய்துவிடுகிறது.
Application பயன்பாடு: எண்ணிக்கையைக் கணக்கிட்டால், நான் எத்தனை முறை என் சகோதரனை மன்னித்திருக்கிறேன் என்பதை விட , ஆண்டவர் என்னை எவ்வளவதிகமாக மன்னித்திருக்கிறார் என்பதே மிகவும் அதிகமாக இருக்கிறது!
Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் உண்மையாகவே மன்னிப்பதில் மாபெரும் வள்ளலாகவே இருக்கிறீர். ஆமென்.
No comments:
Post a Comment