Saturday, October 6, 2012

SOAP 4 Today - அவன் யாரைக் காண ஆவலாயிருந்தான்?

Scripture வேதவசனம்:  லூக்கா 19:3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
4. அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6. அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.

Observation கவனித்தல்:  சகேயு இயேசுவைக் காண ஆவலாயிருந்ததைக் காட்டிலும், இயேசு அவனைக் காண ஆவலாயிருந்தார் என்பதாக காணப்படுகிறது.  சகேயு நினைத்ததைப் பார்க்கிலும் மிகச் சிறந்த நாளை அவர் அவனுக்களித்தார். சகேயு இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று மாத்திரமே நினைத்தான். இயேசுவோ அவ்னுடைய வீட்டிற்குச் செல்ல விரும்பினார். இயேசு அவனுடன் நேரம் செலவழிக்க விரும்பினார்.

Application பயன்பாடு: நான் ஒரு சிறிய பார்வைக்காக ஏங்கி நின்று, ஆனால் இயேசு அதை விட அதிகமாக எனக்கு செய்ய நினைத்த தருணங்கள் தான் எத்தனை? நான் ஒரு சில வசனங்களை வேகமாக வாசிக்க விரும்பும்போது, இயேசு மிகச் சிறப்பானவைகளைக் காண்பிக்க விரும்புகிறார். நான் சிலரை வெறும் ஹலோ என்று சொல்வதோடு வாழ்த்த விரும்புகையில், இயேசுவோ நான் அவருடன் நின்று தேவ அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்.

Prayer ஜெபம்: கர்த்தாவே,  இந்த நாளுக்கான எனது எதிர்பார்ப்புக்கும் மேலாக நான் வாழ விரும்புகிறேன். நான் உம் எதிர்பார்ப்புகளுக்கேற்றபடி வாழ விரும்புகிறேன். ஆகவே நாம் இங்கிருந்து எங்கே செல்லவேண்டும் என்பதைக் காட்டும்.ஆமென்.

No comments:

Post a Comment