Scripture வேதவசனம்: Hebrews 3:5 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
6. கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்.
6. கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்.
Observation கவனித்தல்: மிகவும் எளிமையாகவும் வலிமையாகவும் முன்வைக்கப்பட்டிருக்கும் உண்மை என்னவெனில், “நாமே அவருடைய வீடாயிருப்போம்” என்பதாகும். இது எதிர்காலத்தில் நடக்கப் போகிற ஒன்று அல்ல, தற்போதைய நிகழ்கால நிலைமை ஆகும். நாம் விசுவாசத்தில் இருந்தால், நாம் அவருடைய வீடாக இருக்கிறோம்.
Application பயன்பாடு: யோவான் 14:23ல் நான் இயேசுவை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்தால் அவரும் அவருடைய பிதாவும் வந்து என்னில் வாசம் செய்வார்கள் எனக் கூறியிருக்கிறார். 1 கொரிந்தியர் 6:19ல் அப்போஸ்தலனாகிய பவுல் என் சரீரம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கிறது என்று சொல்கிறார். அவருடைய இடையறாத பிரசன்னத்தை அனுபவிக்க நான் பரலோகம் சேரும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. நான் அவருடைய பிரசன்னத்தை உணராவிட்டாலும் கூட, அவர் என்னுடன் இருக்கிறார் என்பதை நான் அறிந்திருகிறேன்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நாங்கள் உமது வீடு. நான் உமது ஆலயம். உம்முடைய இடையறாத பிரசன்னத்திற்காக நன்றி. என் பேச்சிலும் செயல்களிலும் நீர் காணப்படவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment