Monday, December 10, 2012

SOAP 4 Today - அனல் மூட்டி எரியச் செய்தல்

Scripture வேத வசனம்:   2 தீமோத்தேயு 1:6இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
7. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

Observation கவனித்தல்:  தேவனிடத்திலுருந்து வரும் வரங்கள் மதிக்கப்பட வேண்டும். நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தில் அதிக பயனுள்ளவர்களாக இருக்கும்படிக்கு அவை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் அவைகளைப் பயன்படுத்து தேவ வரத்தை அனல் மூட்டி எரியச் செய்ய வேண்டும். நாம் விசுவாசத்தில் செயல்பட்டு, நமக்கு முன் இருக்கும் தேவையைச் சந்திக்கச் செல்வதினால் நாம் தேவ வரத்தை அனல் மூட்டி எரியச் செய்கிறோம்.
Application பயன்பாடு: நான் தேவ பிரசன்னத்தைப் பற்றிய உணர்வுடன் நான் நடக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர் அருளின தேவ வரத்தைப் பயன்படுத்தும் சூழ்நிலைகளுக்கு நேராக கவனத்தைத் திருப்புகிறார்.  நான் என் எல்லைகளை அறிந்திருந்தாலும், அவர் போதுமானவர் என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும். நான் விசுவாசத்தில் செயல்பட்டு, தேவன் நான் பேச வேண்டும் என்று சொல்கிறதை அல்லது செய்ய வேண்டும் எனச் சொல்கிறதை நான் செய்ய வேண்டும். 

Prayer ஜெபம்: கர்த்தாவே, நீர் எனக்கு தந்திருக்கிற வரங்களைப் பயன்படுத்த விரும்புகிறேன். பரிசுத்த ஆவியான்வரே நான் விசுவாசத்தில் இறங்கி செயல்படவும், உம்மால் எல்லாம் செய்ய முடியும் என்பதை நம்பவும் எனக்கு நினைவுபடுத்தும். ஆமென்.

No comments:

Post a Comment