Scripture வேதவசனம்: யாக்கோபு 4:13 மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய்,
அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து,
சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.
14. நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.
15. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.

Observation கவனித்தல்: எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற நிச்சயம் இல்லாமல் நாம் முக்கியமான முடிவுகளை எடுப்பது வாழ்வின் தன்மையாக இருக்கிறது. நாம் அனேக நேரங்களில் முட்டாள்தனமான நம்பிக்கையில் பேசுகிறோம். ஆகவேதான், திருமண உடன்படிக்கையில் “ வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும் துக்கத்திலும், வறுமையிலும் செழுமையிலும்” என்ற வார்த்தைகள் வருகின்றன. என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதே உண்மை.
Application பயன்பாடு: நான் தீர்மானங்களை எடுக்கும்போது என் குறைவுள்ள அறிவை ஒப்புக் கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய தேவனின் அளவில்லா அறிவை நம்ப வேண்டும் என யாக்கோபு கூறுகிறார்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நாளைய தினத்தின் காரியங்களைக் குறித்து நான் அறியேன், ஆனால் நாளைய தினம் உம் கையில் இருக்கிறது என்றும் நீர் என்னை உம் கரத்தில் ஏந்திக் கொள்வீர் என்றும் அறிந்திருக்கிறேன். ஆமென்.
No comments:
Post a Comment