Monday, December 17, 2012

SOAP 4 Today - நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன்?

Scripture வேதவசனம்:   2பேதுரு 3:1 பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.
2 உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.....
3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்.....
5 (அவர்கள்) மனதார அறியாமலிருக்கிறார்கள்.…
8 நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.…
 
Observation கவனித்தல்: மனதை உண்மைகளால் நிரப்புவதற்கும், அந்த உண்மைகளின் படி செயல்பட எப்படி பழகுவது என்பதற்கான பயிற்சியைப் பெறுவதற்கும் மாணவர்களால் ஏராளமான பணம் ஆண்டுதோறும் செலவழிக்கப்படுகிறது. நம் நினைவுகள் நம் சிந்தனை ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பேதுரு தன் வாசகர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைக் குறித்து கவலைப்பட்டார்.  நம் தற்காலிகமான வாழ்க்கைக்கு அனேக பணம் நேரம் மற்றும் முயற்சிகளைச் செலவழித்து, நம் நித்தியத்திற்கான காரியங்களை அசட்டைச் செய்வது முட்டாள்தனமானது ஆகும்.  பேதுருவின் கவலை நியாயமானதே!
 
Application பயன்பாடு: என் சிந்தனைகளின் வாயில் காப்போன் நானே.  என் சிந்தனைகள் எதற்கு நேராய் இருக்கிறது என்பதைக் குறித்து நான் கரிசனையுடன் இருக்க வேண்டும்.
 
Prayer ஜெபம்:  பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கிற நீர் என் நினைவுகள்  நித்திய வாழ்வில் பலனளிப்பதாக இருக்கும்படி என்னை வழிநடத்தும். ஆமென்.

No comments:

Post a Comment