Scripture வேதவசனம்: யோவான் 7:45 பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும்
திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன்
கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள்.
46. சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
46. சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.
Observation கவனித்தல்: சேவகர்கள் ஆசாரியர்கள் மற்றும் அதிகாரிகளின் வேலையாட்களே, தீர்மானம் எடுப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அவர்கள் இயேசுவை கைது செய்ய அனுப்பப்பட்டனர், அவர்கள் வெறுங்கையுடன் திரும்பி வந்தனர். அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, இயேசு கைது செய்யப்படவேண்டியவர் அல்ல என்று நினைத்தனர். அவரின் வார்த்தைகள் கேட்கப்படத் தக்கவை!
Application பயன்பாடு: இயேசு என்னிடம் இன்று பேச விரும்புகிறார் என்பதைச் சுமந்து செல்லும் வார்த்தைகளாக என் வார்த்தைகள் இருக்க விரும்புகிறேன். நான் வசிக்கிற இடத்திலும், நான் வேலை பார்க்கும் இடத்திலும் உள்ளவர்களிடம் அவர் பேச விரும்புகிறார். அவர் பேசுவதைக் கேட்பது கடினமானது அல்ல, அவருக்கு செவிமடுப்பது ஏற்புடையதாகவே இருக்கிறது.
Prayer ஜெபம்: கர்த்தாவே, நான் உம் வார்த்தையைக் கேட்கிறது போல, உம் வார்த்தைகளைக் கேட்க விரும்பும் மற்றவர்களுக்கான வார்த்தையை எனக்குத் தாரும். ஆமென்.
No comments:
Post a Comment