Wednesday, December 19, 2012

SOAP 4 Today - தேவனின் கேள்விகள்

Scripture வேதவசனம்:  யோவான்:5  இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
6. தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.

Observation கவனித்தல்: ஆதியாகமம் 3:8ல் இருந்து, யோபு புத்தகத்தின் கடைசி அதிகாரங்களிலும், மேற்கண்ட யோவான்6:5ம் வசனத்திலும், இன்றும் தேவன் மனிதரிடம் கேட்கும் கேள்விகளில் பொதுவான தன்மைகள காணப்படுகின்றன.  தேவன் ஒரு கேள்வியைக் கேட்கும்பீது, அதை அவர் நம் பிரயோஜனத்துக்காகவே கேட்கிறார். அவர் அதற்கான பதிலை முன்னமே அறிந்திருக்கிறார்.
 
Application பயன்பாடு: தேவன் என் மனதில் ஒரு கேள்வியை வைக்கும் போது,அது எனக்கு போதிக்கவோ அல்லது என்னைச் சுற்றி அவர் செய்யப் போகிறதை நான் கவனிக்கும்படி என் கவனத்தைத் திருப்புவதற்கோ அல்லது என் ஈடுபாட்டிற்காகவோ இருக்கிறது.  மேற்கண்ட வசனத்தில் இயேசு சீடர்களை ஜனங்களின் தேவைகளைத் தீர்க்கும்படி அவர்கள் கவனத்தைத் திருப்புவதற்காக கேட்டார்.  அவர்கள் ஓட்டல்களில்  பந்தி பரிமாறுபவர்களைப் போல இருந்திருப்பார்கள்.
 
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் கேள்விகளைப் பயன்படுத்தி எனக்கு போதிப்பதற்காகவும், அனேக ஊழியங்களில் என்னைப் பயன்படுத்துவதற்காகவும் நன்றி. ஆமென்

No comments:

Post a Comment