Saturday, December 22, 2012

SOAP 4 Today - இன்னும் சற்று முன்னோக்கிப் பார்த்தல்

Scripture வேதவசனம்:   John 12:27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
28. பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.

Observation கவனித்தல்:அவருடைய வேளை மிகவும் வேகமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. அவர் எதற்காக அனுப்பப்பட்டாரோ அதற்காக அவர் சீக்கிரத்தில் எடுத்துக் கொள்ளப்படுவார்.  அது மிகவும் சந்தோஸத்தை உண்டாக்கக் கூடிய எதிர்பார்ப்பு அல்ல, பயம் நிறைந்த எதிர்பார்ப்பு ஆகும். அவர் இருதயம் வியாகுலப்பட்டது.  அவர் சிலுவையை எதிர்பார்த்து இருந்தார். ஆனால் எபிரேயர் 12:2 அவர் தனக்கு முன்பாக வைக்கப்பட்ட சந்தோசத்துக்காக அவர் அதை சகித்தார் என சொல்கிறது.
 
Application பயன்பாடு: கர்த்தரை சேவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு.  ஆனால் வரப்போகும் காரியங்களுக்காக என் இருதயம் வியாகுலப்படும் தருணங்களே வராது என்பதை அது குறிக்காது. அப்படிப்பட்ட தருணங்களில் நான் இன்னும் சற்று முன்னோக்கிப் பார்த்து பாடுகளின் அடுத்தப் பக்கத்தில் காத்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியைக் காண வேண்டும்.
 Prayer ஜெபம்:  கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவதும்,  உமக்காக நேரம் செல்வழிப்பதும் பாடுபடுவதும் எப்பொழுதும் தகுதியானதாக இருக்கிறது. ஆமென்.

No comments:

Post a Comment