Scripture வேதவசனம்:
2யோவான் 12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும்
மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம்
நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று
நம்பியிருக்கிறேன்.
Observation கவனித்தல்: எழுதப்படும்போது அதிக தொடர்புக் குறைவு ஏற்படுகிறது. அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுவதை விட நேரடியாக பேசுவதற்கு இங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். ஏனெனில் நேரடியாகப் பேசும்போது அவர் தான் பேச்சில் தேவைக்கேற்ப சத்தத்தை உயர்த்தியோ குறைத்தோ மற்றும் அன்பின் அரவணைப்பின் மூலம் தன் செய்தியின் முக்கியத்தை உணர்த்த முடியும். கேள்விகளைக் கேட்பதும் பதில் சொல்வதும் மிகவும் நல்லது ஆகும். ஆயினும் அவை அவர் அவர்களுக்கு நிரூபம் எழுதுவதை தடை செய்ய வில்லை. அவர்களுடைய பிரயோஜனத்துக்காக மாத்திரம் அல்ல, நமக்காகவும் பரிசுத்தஆவியானவர் அவரை ஏவி இருக்கிறார் என்று நாம் இன்று அறிந்து கொள்கிறோம். எழுத்தில் எழுதப்படுவதில் உள்ள நன்மை என்னவெனில், அவை வாசிக்கப்பட்டு மற்றவர்களிடமும் வாசிக்க கொடுக்கப்பட முடியும்.
Application பயன்பாடு:
இன்று இணையதளம் எழுதுவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றிற்கும் சில எல்லைகள் உண்டு, சுருக்கமாக எழுதப்படவேண்டும். நம் பலனுக்கும் தேவ மகிமைக்கும் நமக்கு பரிசுத்த ஆவியானவர் உதவி தேவைப்படுகிறது.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, எனக்கு இருக்கிற தகவல் பரிமாற்ற கருவிகளை
மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், தேவனை மகிமைப்படுத்தவும் பயன்படுத்த எனக்குதவும். ஆமென்.
No comments:
Post a Comment