Scripture வேதவசனம்: பிலிப்பியர் 4:8 கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ,
நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ,
நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே
சிந்தித்துக்கொண்டிருங்கள்.
Observation கவனித்தல்: நாம் எப்படி உணர வேண்டும் என்று வேதாகமம் நமக்குக் கூறுவதில்லை, மாறாக எப்படி சிந்திக்க வேண்டும் என்று சொல்லுகிறது. நம் சிந்தனை வாழ்வைக் குறித்த மிகத் தெளிவான வசனங்களில் ஒன்றாக இவ்வசனம் இருக்கிறது. இந்த வகைகளில் உள்ள காரியங்களில் நம் கவனத்தை நாம் செலுத்த வேண்டும். அனேக மோசமான விபத்துகள் குறிபார்த்துச் சுடும்போது நடப்பதில்லை, இலக்கு இல்லாமல் சுடுவதினாலேயே நடக்கின்றன. நம் சிந்தனைகளும் இதுபோலவே. அவை உரிய இலக்குகளை குறிபார்த்து இருக்க வேண்டும்.
Application பயன்பாடு: நான் மனம் அல்ல, ஆனால் எனக்கு ஒரு மனம் இருக்கிறது. என் சிந்தனைகள் என்னைக் கட்டுப்படுத்தக் கூடாது, நானே என் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பரிசுத்த ஆவியின் துணையுடன் என் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது என் பொறுப்பு ஆகும். என் சிந்தனைகளை தகுதியான காரியங்களில் செலுத்த வேண்டும்.
Prayer ஜெபம்: கர்த்தாவே, சங்கீதம்19:14ல் உள்ளது போல என் இருதயத்தின் தியானம் உமக்கு பிரீதியானதாக இருக்கட்டும். ஆமென்.
No comments:
Post a Comment