Tuesday, December 4, 2012

SOAP 4 Today - பலமடைதல்

Scripture வேதவசனம்:   எபேசியர் 6:10 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

Observation பயன்பாடு:  கர்த்தருக்குள் பலப்பட வேண்டும் என்ற ஊக்கமூட்டும் வார்த்தைகளுடன் பவுல் தன் கடிதத்தின் இறுதிபகுதியை எழுதுகிறார். இன்றைய உலகில் ஒருவர் அனேக பகுதிகளில் பலமுள்ளவர்களாக இருக்க முடியும். ஒரு நபரின் பலம் என்பது விவசாயம் அல்லது பொறியியல் மற்றும் இதர இது போன்ற வகைகளில் இருக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் உறுதியாக வளருவது என்பது அறிவைப் பெறுவது மற்றும் அதை பயன்படுத்துவதைக் குறிக்கிறது. பயன்பாட்டில் இல்லாத அறிவு ஒருவரை பலவீனமாக்குகிறது. கர்த்தருக்குள் பலமுள்ளவர்களாக இருப்பது என்பது நம் ஒவ்வொருவருக்கும் முன்னுரிமையுள்ளதாக இருக்க வேண்டும். அவரைப் பற்றிய அறிவில் நாம் பலமுள்ளவர்களாகும்போது அவரின் வல்லமையின் மீதான விசுவாசத்தில் வளருகிறோம்.              
 
Application பயன்பாடு:  . நான் தேவனைப் பற்றிய அறிவில் வளர்ந்து அதை என் வாழ்வில் நான் பயன்படுத்தும் போது, நான் விசுவாசத்தில் வளர்ந்து அவரைச் சார்ந்து வாழ கற்றுக் கொள்கிறேன்.
 
Prayer ஜெபம்:   கர்த்தாவே உம் வார்த்தைக்காக நன்றி. அதை உண்மை என்று விசுவாசித்து அதின்படி செயல்பட எனக்கு உதவும். ஆமென்!

No comments:

Post a Comment