Thursday, January 24, 2013

காத்திருத்தல்

 
Scripture வேதவசனம்:  அப்போஸ்தலர்  1:5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

Observation கவனித்தல்:  உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷம் அறிவியுங்கள் சொன்னவரே இங்கும் காத்திருங்கள் என்று அவர்களிடம் சொல்கிறார் (மத்தேயு.28:19).  அதுவரைக்கும் அவர்கள் எங்கும் போகாமல் இருக்க வேண்டியதாயிருந்தது.  இரட்சிப்பின் ஈவைத் தந்தவர் அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் ஈவைத் தரப் போகிறார்.
Application பயன்பாடு:  காத்திரு என்று தேவன் என்னிடம் சொல்லும் போது, காத்திருப்பது தகுதியானது தான் என்பதில் நான் உறுதியாயிருக்க முடியும். தேவனுடைய வேளையே பரிபூரணமானது என்பதை நிரூபிக்கும்.  எனக்குத் தேவையானதை அவர் சரியாகத் தருகிறார்.
Prayer ஜெபம்:  கர்த்தாவே, உமக்காக காத்திருப்பது ஒருபோதும் வீணான நேரம் அல்ல.  உமக்காகக் காத்திருப்பது தகுதியானதே. நீர் எனக்காக வைத்திருப்பவைகள் நான் காத்திருக்கத் தகுதியானவைகளே. ஆமென்.

No comments:

Post a Comment