ஜனவரி 24: யாத்திராகமம் 9-11; லூக்கா 24
Scripture: லூக்கா 24:45 அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:
Observation கவனித்தல்: இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்து, உயிர்த்தெழுந்திருந்தார். இயேசுவுடனே கூட நடந்து சென்ற அந்த இரு சீடர்கள் தங்களுடன் வரும் ஆரோக்கியமான நபர் யார் என அறியாமல் இருந்தார்கள். அவர்கள் வேத வாக்கியங்களை தெரிந்து கொள்வதோடு மாத்திரமல்லாமல் அதைப் புரிந்து கொள்ளவும் வேண்டுமென இயேசு விரும்பினார். அவர் நம் பாவங்களுக்காக வந்து மரிக்க வேண்டும் என்பதை பற்றிய வேத வாக்கியங்களை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
Application பயன்பாடு: பரிசுத்த ஆவியானவர் என் மனதைத் திறந்து நான் வேதத்தை அறிந்து கொள்ளும் படிச் செய்யும் ஊழியத்தைச் செய்கிறார். நான் வேத வசனங்களை வாசிக்கும்போது, என் மனதில் எழும்பும் எண்ணங்களைக் கவனிக்கிறேன். நான் ஏற்கனவே வாசித்த வேறொரு வசனத்துடன் ஒரு வசனம் தொடர்புடையதாக இருக்கிறதை அல்லது என் அனுபவத்துடன் தொடர்புடையதாக அல்லது என் நிகழ்கால சுழலுக்குத் தொடர்புடையதாக இருக்கக் காண்கிறேன். வேத வசனம் என் வாழ்வில் எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் கவனிப்பதன் மூலமாக நான் நன்றாக புரிந்து கொள்கிறேன்.
Prayer ஜெபம்: பரிசுத்த ஆவியானவரே, நான் வேத வசனங்களைப் புரிந்து கொள்ளவும் என் வாழ்வில் பயன்படுத்தவும் நீர் எனக்கு உதவுகிற படியால் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். மற்றவர்களுக்கு உதவ என்னைப் பயன்படுத்தும். ஆமென்.
No comments:
Post a Comment