Monday, January 28, 2013

கொடுத்தல் & பெற்றுக் கொள்ளுதல்

ஜனவரி 28: யாத்திராகமம் 21-22; சங்கீதம் 12அப்போஸ்தலர் 4

Scripture வேதவசனம்: அப்போஸ்தலர் 4:34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
35. அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.

Observation கவனித்தல்: வசதியானவர்களிடம் வரி வசூலித்து, ஏழைகளுக்கு அதைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் செய்ய நினைப்பது அன்று நடைமுறை உண்மையாக இருந்ததை அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தில் வாசிக்கிறோம். ஏனெனில் மனமுவந்து கொடுக்கும்படியாக வசதியுள்ளவர்களின் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் பேசினார்.  பரிசுத்த ஆவியானவர் அவர்கள் இருதயங்களை தூண்டியபோது அவர்கள் மனமுவந்து, மகிழ்ச்சியுடன் மற்றும் தாராளமாகக் கொடுத்தனர்.  மகிழ்ச்சியுடனும் மனமுவந்தும் கொடுக்கப்பட்டவைகளை நன்றியுள்ள இருதயத்துடன் பெறுவதற்காக ஏழைகள் முன்வந்தனர். ஆனால் அரசாங்கத்தால் வேறொருவரிடம் இருந்து எடுக்கப்பட்டுக் கொடுக்கப்படும்போது, அவர்கள் அதை எதிர்பார்க்கத்துவங்கி, இலவசமாக கிடைப்பதை முற்றிலும் சார்ந்து இருந்து விடுகிறார்கள்.

Application பயன்பாடு:  பரிசுத்த ஆவியானவரின் இடத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்போது எல்லோரும் நட்டமடைகின்றனர்.  கொடுப்பவர் கொடுப்பதினால் தன் மகிழ்ச்சியை இழக்கிறார். தேவன் கொடுப்பதைக் காண்பதில் மகிழாமல் பெற்றுக் கொள்பவர் மகிழ்ச்சி இழக்கிறார்.

Prayer ஜெபம்:  பரிசுத்த ஆவியானவரே, கொடுப்பதில் மற்றும் பெற்றுக்கொள்வதில் உள்ள மகிழ்ச்சியைப் பெற என்னை வழிநடத்தும்.  நான் மற்றவர்களுக்குக் கொடுப்பவைகளில் உம்மிடம் இருந்து  பெற்றவைகளைக் குறித்த என் நன்றியுணர்ச்சி வெளிப்பட விரும்புகிறேன். ஆமென்.

No comments:

Post a Comment