Tuesday, January 29, 2013

தேவனுடன் ஐக்கியம்

 
Scripture வேதவசனம்: யாத்திராகமம்   24:9 பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
10. இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.
11. அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.

Observation கவனித்தல்:    மிகவும் ஆச்சரியமூட்டுகிற வசனம் இது, பழைய ஏற்பாட்டில் எனக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் வசனங்களில் ஒன்று ஆகும். அவர்கள் தாங்கள் கொண்டு போனதைத்தான் சாப்பிட்டிருப்பார்களா என நான் சந்தேகமடைகிறேன். லட்சக்கணக்கான இஸ்ரவேல் ஜனங்களுக்கு மன்னாவையும் தண்ணீரையும் அளித்தவர் மோசே உடன் மலையில் இருந்த அந்த 70 பேருக்கும்  ஆகாரம் அளிக்கப் போதுமானவர். (ஒருவேளை அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை மாத்திரமே வைத்திருந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அதுவும் தேவன் அவர்களுக்கு அளித்த உணவே. இஸ்ரவேலரனைவரும் உண்ணவும் குடிக்கவுமான் உணவு அதுவே. வேறே உணவு அவர்களிடம் இல்லை) ஆனால் இந்த சிறப்பான உணவு தேவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.  அவர்கள் தேவசமூகத்தில் புசித்தார்கள் என்பதே இங்கே விசேசமான காரியம் ஆகும். தேவன் எவ்வளவு அதிகமாக ஐக்கியத்தை விரும்புகிறார்!
Application பயன்பாடு: தேவன் என்னை மலையில் அவருடன் ஐக்கியம் கொள்ள அழைக்கும்போது நான் பின் தங்கி இருக்க விரும்பவில்லை. தேவனுடன் செலவழிக்கும் நேரத்தில் நான் முறுமுறுத்துக் கொண்டு இருக்க விரும்பவில்லை.    மேலே ஏறிச் செல்வதைக் குறித்து நான் குறை கூற விரும்பவில்லை.  தேவனைச் சந்திப்பதில் முடியும் எனில், எந்த மலையானாலும், பள்ளத்தாக்கானாலும் அது கடினமானது அல்ல.
Prayerஜெபம்:  கர்த்தாவே,  வேதாகமத்தில் உம்முடன் கூட ஐக்கிய உறவு கொள்வது மிகப்பெரிய கனமும் ஆசீர்வாதமுமானதாகும்.ஆமென்.
 

No comments:

Post a Comment