Monday, January 21, 2013

இயேசு விதவையையும் பார்த்தார்

 
Scripture வேதவசனம்:  லூக்கா 21:1 அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
2. ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
3. இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Observation கவனித்தல்:  காணிக்கைப் பெட்டியில் ஏராளமான பணத்தைப் போட்டு ஐசுவரியவான்களை மற்றவர்கள் பார்த்து புகழ்ந்திருக்கக் கூடும். அவர்கள் இந்த விதவையில் சிறிய காணிக்கையைக் கவனித்திருப்பார்கள் எனில், அவர்கள் அதிகமாக எதுவும் சொல்லி இருக்க மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் பார்க்கத் தவறியதை இயேசு கண்டார்.                
Application பயன்பாடு: முதலாவது, எது முக்கியமானது என்பதை என்னால் காண முடியாமல் இருக்கலாம்.  ஆனால் ஆண்டவரும் அதைப் பார்க்கிறார் என்பதில் நான் உறுதியாயிருக்க முடியும். இரண்டாவதாக,   நான் பார்வைக்கு பெரியவைகளாக இருக்கிறவைகளை மட்டும் பார்த்தால், வாழ்க்கையில் அனேக காரியங்களைப் பார்க்கத் தவறி விடுவேன்.  மற்ற்வர்கள் முக்கியனாமதல்ல என்று கருதுபவைகளையும் நான் காண வேண்டும்.
Prayer ஜெபம்:  கர்த்தாவே, நீர் பார்க்கிறது போல நான் அனைத்தையும் காண எனக்குதவும். ஆமென்.

No comments:

Post a Comment