Wednesday, January 23, 2013

ஆயத்தம்

வேதபகுதி: யாத்திராகமம் 3-5; லூக்கா 22
 
Scripture வேதவசனம்:  லூக்கா.22: 8  அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்.
9. அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள 12.ஒருபெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
13. அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
 
Observation கவனித்தல்:  பேதுருவும் யோவானும் ஒரு வேலையைச் செய்யும்படி அனுப்பப்பட்டனர்.  அவர்கள் பஸ்கா உணவு ஆயத்தப்படுத்தும்படி சென்றனர்.  அவர் செய்யப் போகிற தியாகத்தை நினைவுகூறும்படி அந்த உணவை அருந்தும் வேளையில்தான் நம் ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சொன்ன தீர்க்கதரிசனமாகச் சொல்லி இருந்தபடியால், தேவன் இயேசுவின் மரணத்திற்கான ஆயத்தத்தை மிகவும் கவனமாகச் செய்தார்.
 
Application பயன்பாடு:  ஒரு சில காரியங்களே திடீர் முடிவுகளினால் செய்யப்படுகின்றன. ஒருவர் ஆயத்தமாக இருக்கும்படி தயாராக இருக்கிறபடியினால், அந்த வாய்ப்புகள் நடைபெறக் கூடியவைகளாக இருக்கின்றன.  பெரும்பாலன செயல்களுக்கு ஆயத்தம் தேவைப்படுகிறது. நான் ஆயத்தமாக இருக்க விரும்புகிறவைகளில் நான் அதற்கு எவ்வளவு மதிப்பு  கொடுக்கிறேன் என்பதை  காணலாம்.
 
Prayer ஜெபம்:  பரலோகப் பிதாவே, என் பாவங்களுக்கான விலைக்கிரயத்தைச் செலுத்துவதற்காக நீர் செய்த ஆயத்தங்களுக்காக நன்றி. நியாயத்தீர்ப்பு நாளில் நான் உம் முன்பு நிற்பதற்கு நான் செய்யும் ஆயத்தங்களில் நான் உம் மீது கொண்டிருக்கும் பெருமதிப்பு காணப்பட உதவும். ஆமென்.

No comments:

Post a Comment